Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலை விபத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உயிரிழப்பு …!!

விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரவிபாண்டி என்பவர் வெச்சக்கரபட்டியில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரவிபாண்டி மீது மோதியது. இதில் ரவிபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் ரவிபாண்டியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விருதுநகர் சூலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |