Categories
தேசிய செய்திகள்

ஒட்டக பால்ல டீ போடு…. வடிவேலுவை மிஞ்சிய இளைஞர்களின் அட்டூழியம்…. 3 பேர் கைது…!!

மதுபோதையில் ஒட்டகப் பாலில் டீ கேட்டு தகராறு செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் கடலூர்-புதுச்சேரி பிரதான சாலையில்  டீ  கடை வைத்துள்ளார். நேற்று இரவு மூன்று இளைஞர்கள் இவரது கடைக்கு வந்து ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த ஊழியர்கள் ஒட்டக பால் இல்லை என கூறியதால் இளைஞர்கள் மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதோடு குடிபோதையில் இருந்த அவர்கள் கடையில் இருந்த பொருட்களை உடைத்தனர். அவர்களை தடுக்க முயற்சித்த கடையின் ஊழியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்களை கைது செய்தனர்.

இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் கூறுகையில், “மதுபோதையில் இருந்த மூன்று பேரும் பேக்கரிக்கு எதிரே இருக்கும் ஒட்டகப்பால் விற்கும் கடைக்கு பதிலாக பேக்கரியில் தகராறு செய்து விட்டனர். அதோடு அங்கிருந்த ஊழியர்களை தாக்கியதோடு பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். தற்போது அவர்கள் மீது வழக்கு பதிந்து 3 போரையும் கைது செய்துள்ளோம்” என கூறினார்.

Categories

Tech |