Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இனி மிரட்டல் தான்…! ”நிலைகுலைந்த டிரம்ப்”.. புலம்ப விட்ட ஜோ பைடன்…!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் ட்விட் பதிவிட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையே தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். 214 வாக்குகள் மட்டுமே டிரம்ப்புக்கு கிடைத்திருக்கின்றன. அசோசியேட் பிரஸ் என்று சொல்லக்கூடிய நம்பகமான செய்தி நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில் வெறும் 6 வாக்குகள் மட்டுமே பெற்றால் ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்படுவார். இப்படியான ஒரு சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையை ட்ரம்ப் தொடர்ந்து விடுத்திருந்தார். அதையே இன்றும் வலியுறுத்தும் விதமாக தற்போது (அமெரிக்காவில் காலை நேரம்) இந்த நேரத்தில் மீண்டும் ட்விட் மூலமாக அந்த கோரிக்கையை வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு மிரட்டல் விடுக்கும் தோணியிலே (STOP THE COUNT!) என்ற அவரின் ட்விட் பதிவு உள்ளது.

ஒரு வல்லரசு நாட்டின் அதிபராக கூடியவர் அந்த நிலையை மறந்து, மிரட்டல் விடுக்கும் தொனியில் வார்த்தையை பயன்படுத்தி இருப்பது பலருக்கும் வினோத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த ஸ்டாப்  த கவுண்ட் என்ற ட்ரம்ப் பதிவு அமெரிக்காவினுடைய மக்களாட்சி கிடைத்து இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.

Categories

Tech |