நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவிற்குள் செய்யப்பட்டுள்ள புதிய முதலீடுகளில் தமிழகம் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்த்து 16 சதவீத பங்குடன் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 27-ஆம் தேதி 17 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழக அரசு கடந்த மாதம் 10 ஆயிரத்து 62 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் 18 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-ஆம் இடத்தில் 11 சதவீதத்துடன் ஆந்திராவும் மூன்றாமிடத்தில் 7 சதவீத பங்குடன் மகாராஷ்டிரா ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.