Categories
அரசியல் உலக செய்திகள் சற்றுமுன்

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை ? ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு ….!!

அமெரிக்க அதிபரின் மிரட்டல் தொனியிலான ட்விட் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே ஜோ பைடன் முன்னிலை பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத தற்போதைய அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொனியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த ட்விட் பதிவு பல உலக நாட்டு தலைவர்களை வியப்படைய வைத்துள்ளது.

ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அதிபர்…. தன்னிலை மறந்து, தன்னுடைய பொறுப்பை மறந்து,  அதிபர் என்ற நிலையை மறந்து மிரட்டும் தொனியில் ட்விட் செய்யலாமா என கேள்வி எழுப்பியதுடன், அமெரிக்கா மக்களாட்சிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சவால் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர். அதிபர் டிரம்ப் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும். அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயார் என்ற நிலையில் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே விஸ்கான்சின், மிக்சிகன் போன்ற மாநிலங்களில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி ட்ரம்ப் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. விஸ்கான்சின் போன்ற மாநிலங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது என்றால் 15 – 20 நாட்களுக்கு மேல் ஆகும். அதன் காரணமாக தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவர தாமதம் ஆகக்கூடும். மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்கான செலவு முழுவதையும் கட்ட வேண்டும் என்ற சூழல் கூட இருக்கிறது. அதற்கும் ட்ரம்ப் தயாராக இருக்கிறார்.

Categories

Tech |