கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டன. ஏறக்குறைய 7 -8 மாதங்களுக்கு பின்பு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளத்தில் பள்ளி – கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளை வழிநடத்தும் யுஜிசி என்று என்று சொல்லக்கூடிய பல்கலைக்கழக மானியக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்கள் பல்கலைக்கழகம், கல்லூரிகளை திறக்க முயற்சித்து வரும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்கள், பேராசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தலையாய கடமை. மாணவர்கள், பேராசிரியர்களின் பாதுகாப்புய, உடல் நலன் முக்கியம். அங்குள்ள சூழலைப் பொறுத்து வழிகாட்டுதலை பின்பற்றி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.