Categories
உலக செய்திகள்

17வயது சிறுமியுடன் திருமணம்…! ”22நாட்களில் கசந்த வாழ்கை”… 78வயது தாத்தா எடுத்த தீடீர் முடிவு…!!

17 வயது சிறுமியை 78 வயது முதியவர் திருமணம் செய்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்தவர் அபா சர்னா(78) என்ற முதியவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோனி நவிதா (17) என்ற சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 22 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் முதியவர் நோனியை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்துள்ளார். வயது வித்தியாசம் பாராமல் நடைபெற்ற இந்த திருமணம்  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே அபா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் நோனியின் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்தி இந்த விவாகரத்து சம்பவம் குறித்து நோனியின் சகோதரி ஐயன் கூறுகையில், “இவர்கள் இருவருக்கும் இடையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாதபோது விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் எங்கள் குடும்பத்தினருக்கு அபாவுடன் வயது வித்தியாசம் தொடர்பாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அபாவின் குடும்பத்தாருக்கு தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தன இந்த திருமணத்தை எதிர்த்தார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நோனி திருமணத்திற்கு முன்னபே கர்ப்பமாக இருந்துள்ளதால் தான் புதுமணத்தம்பதிகள் பிரிந்து விட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தம்பதிகளுக்கு விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து திருமணத்திற்காக அபா கொடுத்த வரதட்சணை பொருட்களை ஆட்டோ மூலம் ஏற்றி செல்லப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |