நம் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை நாளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதில் நம் நாட்டிற்கு உரிமையான செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வணிகரீதியிலான செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது.
அதனை டிசம்பர் மாதத்தில் விண்ணில் ஏவுவதற்கான திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கின்ற சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்டு வரும் பிஎஸ்எல்வி சி -49 ராக்கெட்டை நாளை மாலை 3 மணியளவில் விண்ணில் ஏறுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதில் நம் நாட்டிற்கு சொந்தமான இஓஎஸ்.01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனுடன் சேர்த்து வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான 9 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான இஸ்ரோ திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த செயற்கைகோள் மூலமாக விவசாயம், பேரிடர் மேலாண்மை மற்றும் காடுகள் கண்காணிப்பு பணிகளை துல்லியமாக அறியமுடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.