கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் வெளிநாட்டினர் சீனா வரக்கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
நாட்டில் குளிர்காலம் மற்றும் வசந்த காலம் தொடங்க இருப்பதால் உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று சீன கருதுகிறது. அதனால் வெளிநாட்டினர் எவரும் தங்கள் நாட்டுக்குள் நுழைய கூடாது என்று கட்டுப்பாட்டு விதிகளை சீனா விதித்துள்ளது. அவ்வாறு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகின்ற, விசா அல்லது உறைவிடம் அனுமதி பெற்று இருக்கும் வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதற்கு சீனா தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவை இந்தியா மட்டுமல்லாமல் மேலும் சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது எனவும், இது தற்காலிகமான தடை என்றும் டெல்லியில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து சீனா செல்வதற்கு வெளிநாட்டினர் எவருக்கும் இந்தியாவில் உள்ள சீன தூதரகம் சுகாதார ஒப்புதல் வழங்காது என்றும், ஆனால் கடந்த 3 ஆம் தேதிக்கு முன்னர் வழங்கப்பட்ட விசா கொண்டிருப்பவர்கள் அனைவரும் சீனா செல்வதற்கு தடை இல்லை என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.