Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 2-வது அலை… ஒரே நாளில் 6,715 பேர் பாதிப்பு..!!!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

டெல்லியில் சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 6,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,16,653 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,769 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 3,71,155 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 38,729 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |