மிங்க் விலங்குகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதால் அவற்றை கொல்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டென்மார்க்கில் மிங்க் விலங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதால், 17 மில்லியன் விலங்குகளை கொல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் Mette Frederikson தெரிவித்துள்ளார். இந்த விலங்குகளிடமிருந்து கண்டறியப்பட்ட இந்த வைரஸானது நோய் எதிர்ப்பு சக்தியையும், தடுப்பூசியின் செயல்திறனையும் குறைப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் சீனாவிற்கு வெளியில் மனிதனிர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் மாறி மாறி பரவும் சிக்கலான பிரச்சினை பற்றிய விசாரணைகளுக்கு உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்டத்தின் தலைவரான மைக் ரியான் அழைப்பு விடுத்துள்ளார். நோய் தொற்றுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் போன்ற நாடுகளிலும் மிங்க் விலங்குகள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.