டெல்லி புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி நேற்று துணை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை, தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா, பிரதமர் அலுவலக இணை மந்திரி ஆகியோரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.