Categories
தேசிய செய்திகள்

21வயது ”பெண்ணுடன் ஓடி போன” 20வயது பெண்….! தாயின் போனுக்கு வந்த செய்தி… ஆடிபோன குடும்பத்தினர் …!!

தோழிகளாக இருந்த இரண்டு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி  திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிப்பவர் காத்தூன். இவருக்கு சிம்ரன்(21) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிப்பவர் பார்வதியின் மகள் புஷ்பலதா(20). சிம்ரனும், புஷ்பலதாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிம்ரன் முதலாமாண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புஷ்பலதா மற்றும் சிம்ரன் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சிம்ரனின் அம்மாவின் செல்போனுக்கு, புஷ்பா அனுப்பிய வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்துள்ளது. அதில், “10 வருடங்களுக்கு மேலாக தோழிகளாக பழகி வந்த நாங்கள் திடீரென ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினோம். இந்நிலையில் திருமணமானால் ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடியாது என்று கருதி நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பெண்ணாக இருந்த புஷ்பா ஆணாக மாறியுள்ளார். தன்னுடைய சிகை அலங்காரம் மற்றும் உடை அலங்காரத்தை மாற்றி சிம்ரனுக்கு கணவனாக மாறியுள்ள புஷ்பா, தங்களுடைய புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக வீட்டிலிருந்து செல்லும் போது 50,000 ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இருவரையும் தங்களிடம் மீட்டுத்தருமாறு காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |