Categories
உலக செய்திகள்

இப்படிலாம் நடக்கவே கூடாது….! ”அவமானபட்ட அமெரிக்கா”…. உலக நாடுகள் விமர்சனம்…!!

தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட சிக்கலால் நடந்த போராட்டங்கள் அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உலக நாடுகள் விமர்சித்துள்ளன.

அமெரிக்க நாட்டில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நடந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவிற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உலக நாடுகள் விமர்சனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நியூயார்க் மற்றும் பிற நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் – காவல்துறையினருக்கும் இடையே நடந்த சண்டையினை ரஷிய ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதால் இது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என ரஷியா தெரிவித்துள்ளது.

இதுபோன்ற வன்முறை மற்றும் போராட்டங்கள் வளர்ச்சி பெறாத நாடுகளில் தேர்தலின் போது நடப்பது யதார்த்தமானது நிகழ்வு ஆகும். ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டத்தை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கென்ய செய்தித்தாளில் அமெரிக்காவுக்கு அவமானம் என்று தலைப்பு செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் நிலவுவதாக துருக்கி ஊடகங்களும், அரசியல் மற்றும் நிர்வாக குழப்பத்தில் உள்ளதாக ஸ்பெயின் நாட்டின் எல் முண்டோவும் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சுதந்திர தேவியின் கழுத்தில் டிரம்ப் கத்தி வைப்பது போன்ற கார்ட்டூன் ஒன்றை தென்னாப்பிரிக்க செய்தித்தளமான டெய்லி மேவ்ரிக் வெளியிட்டுள்ளது. இவ்வாறாக பல நாடுகளும் அமெரிக்காவை விமர்சித்துள்ளன.

Categories

Tech |