Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தொடர் கனமழை… வீடுகளில் புகுந்த மழைநீர்… பொதுமக்கள் அவதி…!!!

சென்னையில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடந்த 28ஆம் தேதி சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

நேற்று இரவு பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ராமநாதபுரம், வளசரவாக்கம், போரூர், மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |