இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 47,638 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 83,11,724 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 670 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,24,985 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 53,157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77,56,478 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது வரை 5,20,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 12,09,609 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதனால் தற்போது வரை 11,29,98,959 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.