Categories
உலக செய்திகள்

2 குழந்தைகளை கொன்று…. தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை…. லண்டனில் பயங்கரம் …!!

நபர் ஒருவர் தனது குழந்தைகளை குத்தி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள இல்போர்ட் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர் நடராஜ நித்யகுமார்(40). இவர் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய குழந்தைகளான பவின்யா(19 மாதம் ) மற்றும் நிகாஷ்(3) இருவரையும் கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் நடராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் உடல்நலம் சரியான பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட  அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் நடராஜ்  இரண்டு குழந்தைகளையும் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், “நடராஜ் தனது  இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ததை காவல்துறையில் ஒப்புக் கொண்டு உள்ளார். இதற்கு காரணம் வேலை செய்யும் கடையில் வாடிக்கையாளர்கள் அவரை வருத்தப்படும்படி நடந்து கொண்டதால் மனசோர்வு அடைந்ததாக கூறியுள்ளார். இது ஒரு delusional கோளாறு எனவே குழந்தைகளை கொலை செய்ய இது வழி வகுத்திருக்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இதற்கு முன்னர் உள்ள காலகட்டத்தில் எந்த ஒரு வழக்குகளும்  இல்லை என்றாலும் அது மனித குலத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வது பொருத்தமானதாக இருக்காது என்று மறுக்கப்பட்டுள்ளது. மேலும் நடராஜ் குறித்து மேலும் பல தகவல்கள் தேவை என்று கூறிய  நீதிபதி தண்டனையை வரும் 10ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளார். இதையடுத்து நடராஜ் நித்யகுமாரை லண்டனில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |