Categories
தேசிய செய்திகள்

இனிமே உஷாரா இருங்க… 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்… மிகப்பெரிய ஆபத்து… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் அதிக அளவு அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வயது குறைந்தவர்களிடம் கொரோனா நேர்மறை சோதனை செய்யப்பட்டது. அதில் 40 சதவீதம் பேர் அறிகுறி அற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் சிலர் உணர்திறன் மற்றும் பல்வேறு கண்டறிதல் சோதனைகளில் பயன்பாடு பற்றி விவாதம் செய்யப்பட்டது. அப்போது இது பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் 73 சதவீத அறிகுறி ஏற்ற பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.

மேலும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 38 சதவீத பாதிப்புகள் மட்டுமே அறிகுறியற்றவையாக உள்ளன. இது பற்றி எய்ம்ஸ் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஊர்வசி சிங் கூறும்போது, “இது எங்கள் மையத்தில் இருக்கின்ற புள்ளிவிவரங்கள் ஆர்டி. பிசிஆர் சோதனையின் பல நோயாளிகளிடம் அறிகுறி இல்லாததால், எந்த நாளில் நாங்கள் அவற்றை சோதனை செய்கிறோம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அவசர கால கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று கருதி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிபிஎன்ஏடி மற்றும் ட்ரூநாட் சோதனை கருவிகள் மிகத் துல்லியமான முடிவுகளை விரைவாக கொடுக்கும். அதுமட்டுமன்றி கொரோனா மையத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்த கருவிகள் உதவும். மேலும் குழந்தைகளிடம் அதிக அளவு பாதிப்புகள் பரவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |