Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த சட்னியை சாப்பிட்டால்… சுகர் உடனே குறைந்து விடும்…!!!

பாகற்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

பாகற்காய்                   – 1
தேங்காய் துருவல் – 2-3 டேபிள் டீஸ்பூன்
மல்லி                           – 1 டீஸ்பூன்
சீரகம்                            – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்               – 5-6
புளி                                 – 1 சிறிதளவு
வெல்லம்                    – 1 எலுமிச்சை அளவு
உப்பு                               – தேவையான அளவு

தாளிப்பதற்கு.

எண்ணெய்                   – 2-3 டேபிள் ஸ்பூன்
கடுகு                              – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு      – 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு       – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை         – சிறிது
பெருங்காயத் தூள்  – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பாகற்காயை துண்டுகளாக்கி, அதில் உள்ள விதைகயை நீக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து புரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அப்படி ஊற வைத்த பின் பாகற்காயானது நீரை வெளியேற்றிவிடும். அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மீண்டும் நன்கு புரட்டி விட வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்திருக்கும்.

பின்பு புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். மிக்ஸியில் பாகற்காய், மல்லி, சீரகம், வர மிளகாய், உப்பு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சட்னியின் நிறமானது, அடர் சிவப்பு நிறத்தில் மாறியதும் இறக்கினால் பாகற்காய் சட்னி தயார். இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Categories

Tech |