Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரை நடத்தலாம்…. பல்டி அடித்த தமிழக அரசு…. பரபரப்பு தகவல்…!!

வேல் யாத்திரை நடத்தப்பட கூடாது என்று கூறிய தமிழக அரசு தற்போது நடத்த அனுமதி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்றிலிருந்து ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். மேலும் இதில் பல மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது . இதையடுத்து பாஜக தலைவர் வேல்முருகன் முதல்வரை நேரில் சந்தித்து வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் வேல் யாத்திரை நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்திற்கு உள்ளான நிலையில், இந்த தடையை மீறியும் வேல் யாத்திரை நடப்படும் என்று பாஜக தலைவர் வேல்முருகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று நடத்தப்பட்ட வேல் யாத்திரை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது திடீரென்று காவல்துறை வேலயாத்திரை நடத்தலாம் என அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |