Categories
மாநில செய்திகள்

பண்டிகைக்கு கடைக்குப் போறீங்களா?… அப்போ இது உங்களுக்கு தான்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பண்டிகை காலங்களில் கடைக்காரர்கள் மற்றும் கடைக்கு பொருள் வாங்க செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள எழும்பூர் மருத்துவமனையில் நாடு கோடி ரூபாய் மதிப்பிலான சிடி ஸ்கேன் கருவி பயன்பாட்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவங்கி வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசுகையில், “தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இருந்தாலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மிக கவனமாக பின்பற்ற வேண்டும். கடைக்காரர்கள் மற்றும் கடைக்கு பொருள் வாங்க செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

அதனை மீறினால் அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும். மிக முக்கியமான பண்டிகை காலங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதனை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே கொரோனா பாதிப்பு குறையும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |