மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுக அரசு, தமிழக மக்கள் நலனையே இலக்காக கொண்டுள்ளது என துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் அனைத்து ஆன்லைன் சட்டங்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, இளைஞர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கும் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்கள் இருக்கும் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
அதிமுக அரசு என்றுமே தமிழக மக்கள் நலன் ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாமானிய மக்களின் முழு உழைப்பையும் சுரண்டிய லாட்டரி சீட்டு முறையினை கடந்த 2003 ஆம் ஆண்டு மாண்புமிகு அம்மா அதிரடியாக தடை செய்து பாமர மக்களைக் காப்பாற்றினார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு முறையை சுயலாபத்திற்காக மீண்டும் கொண்டு வந்தது. அதனை என்றும் மக்கள் மறக்க மாட்டார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.