Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளைத் திறந்த ஆந்திரா… 4 நாட்களில் மிகப்பெரிய ஆபத்து… கதறும் பெற்றோர்கள்… பதில் சொல்லுமா அரசு?…!!!

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு நான்கு நாட்களில் 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பது பற்றி மாநில அரசுகள் இறுதி முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் தொடங்கப்பட்டு நான்கு நாட்களில் 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பள்ளிக்கல்வி ஆணையர் சின்னவீரபத்ருது கூறுகையில், “கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை நினைத்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். மொத்தமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவானது. மாநிலத்தில் உள்ள 1,11,000 ஆசிரியர்களின் 99 ஆயிரம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களின் 829 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |