Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள்…. மாற்றாக தீபம் ஏற்றுங்கள்…. மாநில அரசு வலியுறுத்தல்…!!

பட்டாசு வெடிப்பது கொரோனா நோயாளிகளை பாதிக்கும் என்பதால் அதற்கு பதிலாக தீபாவளியன்று தீபம் ஏற்றுமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 13-ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆனால் இந்த வருடம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட தகவலில் மாநில அரசு கூறியிருப்பதாவது, “வருடங்கள் தோறும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் அதிகளவு பட்டாசு வெடித்து வருகின்றனர்.

இதனால் காற்று மாசுபடுவதோடு மட்டுமல்லாமல் ஒளியும் மாசு படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகள் பெரும் பாதிப்பை அடைகின்றனர். இந்நிலையில்  இந்த ஆண்டும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபட்டு அது கொரோனா நோயாளிகளை நேரடியாக பாதிக்கும். எனவே மக்கள் இதை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும்  இதற்கு மாற்றாக வீடுகளில் அதிக அளவில் தீபங்களை ஏற்றி தீபாவளியை கொண்டாடுங்கள்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |