காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சாஸ் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை செம்புக்குட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் வடுக்கப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய சிறுமி வீட்டை விட்டு வெளியேறி பிரகாஷ்யுடன் சென்ற நிலையில் சிறுமி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். பின் அங்கிருந்து தப்பிய சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூற பிரகாஷின் வீட்டிற்கு சென்று கேட்டு உள்ளனர்.
ஆனால் பிரகாஷின் வீட்டில் சாதியை காரணம் காட்டி திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரகாஷை கைது செய்த காவல்துறையினர் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.