பஞ்சாமிர்தம் என்றாலேஅதிக இனிப்பும், சிறிய பழங்களும் நிறைந்து இருக்கும் என்றும் கூட சொல்லலாம். பழனி மற்றும் பழனியை சுற்றியுள்ள கிராமங்களில், பங்குனி மாதங்களில் விழா நடத்தி அதிக பஞ்சாமிர்தம் செய்து, ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்குவது பழக்கமாகவே இருந்து வருகிறது. காலையிலும், மாலையிலும் பஞ்சாமிர்தத்தை எடுத்து ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் போதும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க செய்து , நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்து கொள்வதில் அதிக அளவு உதவியாக இருக்கிறது.
பஞ்சாமிர்தம் செய்ய தேவையானப்பொருட்கள்:
வாழைப்பழம் – 10,
நாட்டு சர்க்கரை – 100 கிராம்,
பேரீச்சைம் பழம் – 50 கிராம்,கொட்டை நீக்கியது
திராட்சை – 25 கிராம்,
நெய் – 50 கிராம் கல்கண்டு – சிறிதளவு
செய்முறை:
வாழைப்பழத்தை எடுத்து தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். பேரீச்சம் பழத்தை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் நறுக்கி வைத்த வழைப்பழம்,பேரிச்சம் பழம், கல்கண்டு, உலர் திராட்சை, நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு மாவாக பிசைந்து எடுத்தால் பஞ்சாமிர்தம் ரெடி. இதனை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வரலாம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.