Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் நவம்பர் 30 வரை… டெல்லியில் புதிய உத்தரவு… சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்…!!!

டெல்லியில் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிப்பதற்கு அம்மாநில அரசு தடை விதித்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு நாட்களாக தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சத்தியேந்திர ஜெயின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டெல்லியில் காற்று மாசுபாட்டை கருதி பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வகையில் டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகள் வெடிப்பது இருக்கும் நவம்பர் 7ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது கொரோனா மூன்றாவது அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது 7,231 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருந்தாலும் மருத்துவமனையில் 8,572 கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |