கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் ஸ்டாலின் இருப்பதாக பாஜக தமிழக தலைவர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தடையை மீறி வேலை வேல்யாத்திரை தேடுவதற்காக எல். முருகன் திருத்தணி புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு பின்னணியில் ஸ்டாலின் இருப்பதாக தெரிவித்தார். திமுகவின் சட்டப்பிரிவு கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து எல். முருகனுடன் 200-நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் திருத்தணி சென்றதால் கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஏராளமான வாகனங்களில் சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் 10 வாகனங்களில் திருத்தணி செல்ல அவர்கள் அனுமதி வழங்கினார். இதனிடையே தடையை மீறி பாஜகவினர் வேல்யாத்திரை நடத்துவதால் திருத்தணியில் 2000-ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது திருத்தணி நகரில் பாஜகவினர் அனுமதிக்கப்படாத நிலையில் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.