காவல்துறையினரை தவறாக பேசிய குடிகார நபர் போதை தெளிந்ததும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரதிலுள்ள தாயுமானவர் பகுதியில் வசிப்பவர் வினோத்(35). இவர் சம்பவத்தன்று இரவில் குடித்துவிட்டு வேணுகோபால் பிள்ளை தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வினோத்திடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் வினோத் கேட்காமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவருடைய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் வினோத் காவல்துறையினரை தரக்குறைவாக பேசியதால், மரியாதையாக பேசுமாறு காவலர்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து மறுநாள் விடிந்த பிறகு போதை தெளிந்த வினோத், காவலர்களிடம் தான் செய்த செயலுக்காக கையெடுத்து கும்பிட்டு தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். மேலும் போதையில் நான் தகாத வார்த்தைகளை பேசியதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறியுள்ளார். ஆனால் அதை ஏற்காத காவல்துறையினர் வினோத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.