தக்காளி பழத்தில் லைகோபீன் என்னும் சத்துகள் உள்ளதால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளை தடுக்க உதவுவதால், இதனுடன் மஞ்சள் துளை சேர்த்து கலக்கி சருமத்திற்கு பூசி கொள்ளலாம் அல்லது அப்படியே சாப்பிட்டு வரலாம்.
கிவி, பீட்ருட், அவகோடா, பசலைக்கீரை, ஆப்பிள், ஆரஞ்சு, பீன்ஸ், பெர்ரி பழங்கள், மாதுளை போன்ற நல்ல ஆரோக்கியமான உணவுகளில், வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறி, இளமையான தோற்றத்தில் நீட்டிப்பதுடன், உடல் நன்கு பொலிவு பெறும்.
தர்பூசணியில்அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்து உள்ளது. தர்பூசணிப் பழமானது தாகத்தை தீர்ப்பதனுடன், உடம்புக்கு குளிர்ச்சியை தருவதனுடன், உடம்பிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும் இது உடல் வெப்ப நிலையை குறைக்க உதவுகிறது. இது ருசிமிகுந்து காணப்படுவதால், குழந்தைகளுக்கு தினமும் தர்பூசணியை வெட்டி 1 கப் கொடுத்து சாப்பிட வைக்கலாம்.
முள்ளங்கியில்,அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதை தினமும் சாப்பிட்டு வரலாம். முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றை சாப்பிடுவதால் உடம்புக்கு எனர்ஜியை கொடுக்கும்.