Categories
உலக செய்திகள்

எங்க தலைக்கு தில்ல பாத்தியா… ட்விட் போட்டு ட்விட்டருக்கு மிரட்டல்…. எல்லை மீறும் டிரம்ப்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் நிறுவனம் எல்லை மீறி செல்வதாகவும் , தனது ஆட்சி மீண்டும் அமைந்தால் சட்டப்பிரிவு 230 ஐ அந்நிறுவனத்திற்கு பரிசாக அளிப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 இடங்களை ஒருவர் கைப்பற்ற வேண்டும். இதுவரை வந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துக்களை அந்நிறுவனம் நீக்கி வருகிறது. இதுவரை ட்ரம்ப் பதிவிட்ட  10 க்கும் மேற்பட்ட ட்வீட்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ட்விட்டர் வாயிலாகவே ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டும் தொனியில் ‘ட்விட்டர் நிறுவனம் எல்லை மீறி செல்கிறது  , தனது ஆட்சி மீண்டும் அமைந்தால் சட்டப்பிரிவு 230 ஐ அந்நிறுவனத்திற்கு பரிசாக அளிப்பேன்’ என பதிவிட்டுள்ளார்

Categories

Tech |