Categories
உலக செய்திகள்

வெளியே போகாதீங்க…!  ”ரூ. 6,23,211அபராதம்”…  புலம்பும் மக்கள் …. பிரிட்டன் அரசு அறிவிப்பு …!!

புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.

பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட மக்கள் பேருந்துகளில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தடைகளை மீறினால் அபராதமும், அதிகபட்ச தண்டனையும் எதிர்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறுவதற்கான அபராதத்தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 100 பவுண்டாக குறைக்கப்படும்.

ஆனால் விதிகளை மீண்டும் மீண்டும் மீறுபவர்களுக்கு 6400 பவுண்ட் வரை ( இந்திய மதிப்பில் ரூபாய்  6,22,861 ) அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் விளையாட்டு, திருமண நிகழ்ச்சி, மற்றும் போராட்டம் போன்றவற்றிற்கு செல்லலாம் என்பதற்கும் விலக்கு நீக்கப்பட்டுள்ளதால் இனி இதற்காகவும் வீட்டை விட்டு வெளியே சென்றால் அபாரதங்களை கட்ட நேரிடும் என்று பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |