தஞ்சையில் அரிவாளை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ராஜீவ் காந்தி என்ற நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சரபோஜி என்ற மகன் இருக்கிறான்.சம்பவத்தன்று பஸ் நிலையம் அருகிலுள்ள கல்லூரிக்கு சொந்த வேலையாக வந்துள்ளார். பின்பு அவர் கல்லூரியை விட்டு வெளியே நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மாரியப்பன் மற்றும் சேகர் சரபோஜி டம் செல்போனை தாருங்கள் பேசிவிட்டு பேசிவிட்டு தருகிறோம் என்று கூறினார்.
சரபோஜி கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் செல்போன் மற்றும் ரூபாய் 200 பணத்தை பறித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் சேகர் கைது செய்தனர்.
இதே போன்ற சம்பவம் சேவப்ப நாயக்கன் வாரி நேரு நகரை சேர்ந்த குகன் என்பவருக்கும் நடந்துள்ளது. சம்பவத்தன்று இவர் பஸ் நிலையம் அருகே ஒரு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போது பின்னால் இறங்கிய மர்ம நபர் குகனின் சட்டை பையிலிருந்து செல்போனை எடுத்து உள்ளார். இதனைப் பார்த்த குகன் அவரைப் பிடித்து மேற்கு நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தஞ்சை அரியலூர் என்னும் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் கருணாகரன் என்பது தெரியவந்துள்ளது. பின்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாகரனை கைது செய்துள்ளார்.