உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மின் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று(நவ 6) வெளியிட்டுள்ள அறிக்கையில் மின் கட்டணம் அதிகரித்து வருவதாகவும் , இதனால் சிறு குறு தொழில் நிறுவனத்தினர், கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் மின் கட்டண உயர்வு அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்
.கடந்த 8 ஆண்டுகளில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் கிராமப்புறங்களில் 500 விழுக்காடும், நகரப்புறங்களில் 84 விழுக்காடும், விவசாயிகளுக்கு 176 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் . பூட்டப்பட்ட வீடுகளில்கூட 8000 வரை மின் கட்டணம் வசூலிப்பதாகவும், மின்சார மீட்டர் நிறுவப்படாமல் உள்ள வீடுகளிலும் மின் கட்டணம் செலுத்துமாறு ரசீது வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் உடனடியாக இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மின் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் .