தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தலைவர் உள்பட 508பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 6 – 7 மாதங்களில் வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளை தொடங்கி உள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அதிரடி முடிவுகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனதில் தேர்தலுக்கான வியூகத்தை விதைத்துக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று பாஜக சார்பில் வேல் யாத்திரையை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அரசின் தடையை மீறி இன்று காலை தொடங்கிய வேல் யாத்திரை திருத்தணி வரை சென்றது. பின்னர் பாஜக தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
தற்போது கைது செய்யப்பட்ட பாஜக தலைவர் எல் முருகன் உள்பட 508 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி யாத்திரை, அனுமதியின்றி கூட்டம் கூடியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.