உலக நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வானிலிருந்து தாக்கும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது.
உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி வந்தாலும், தற்காப்பு என்ற பெயரில் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மனித குலத்திற்கு பெரும் ஆபத்தான ஆயுதங்களை தயாரித்து, அவற்றை உலக நாடுகள் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாடுகளின் அதிருப்தியை பெற்றுள்ள சைனா பெரும் ஆபத்தான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை தயாரித்து, சோதனை மேற்கொண்டுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு பாராட்டும் நிலையில் சைனா இரு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இந்த ஏவுகணையை தயார் செய்துள்ளது.
போர் விமானங்கள் மூலம் வானில் இருந்துபடியே ஏவப்படும் இந்த ஏவுகணை 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்க கூடிய வல்லமை கொண்டதாகும். இந்த ஏவுகணையை தமது HRN போர் விமானத்தில் பொறுத்தியுள்ள சீனா,அவற்றை சோதனையும் செய்துள்ளது. சைனா மேற்கொண்ட இந்த சோதனைக்கு காட்சிகள் தற்போது வெளியாகி, உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது.
சைனா தற்போது தமது HRN விமானங்களுக்காக வான்வெளி ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாகி வருகிறது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் கடலில் உள்ள எந்த ஒரு எதிரி போர் கப்பலையும் கண்சிமிட்டும் நேரத்தில், அழிக்க முடியும். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு பிறகு சைனாவும் களமிறங்கி இருப்பதால், உலகில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் போர் தீவிரமடைந்துள்ளது.
மேலும் TF 21D ஏவுகணையும் சைனாவின் பலத்தை அதிகரித்து உள்ளது. தரையிலிருந்து செலுத்தக்கூடிய இந்த ஏவுகணை குறித்து சைனா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் பெறவில்லை. அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி வரும் சீனா, ஆசிய கண்டத்தில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புவதை உறுதிப்படுத்தியுள்ளது.