Categories
அரசியல் மாநில செய்திகள்

பாக்கத்தான செய்றீங்க….! தேமுதிக தான் முதல் கட்சி… இதான் எங்களின் பலம்… மாஸ் காட்டிய பிரேமலதா …!!

தமிழகத்தில் முதல் கட்சியே தேமுதிக தான் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எல்லா கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கின்றது. அதை சொல்வதற்கு உரிமை இருக்கின்றது. அதிமுக கூட்டணியில் இருப்பவர்களை மட்டும் தான் நீங்கள் கேட்கிறீர்கள். திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கு கூட பலவிதமான குழப்பங்கள் இருக்கின்றது. கட்சிகளுக்குள் மாற்றுக்கருத்து இருக்கின்றது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். ஒரு கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக தங்களுடைய சொந்த கருத்தை பதிய வைக்க கூடாது என்பதற்கு ஒண்ணுமே கிடையாது.

நிச்சயமாக அவுங்கவுங்கவங்க கட்சி ஒரு நிலைப்பாடு இருக்கு. அதை உரிமையோடு சொல்லலாம். தேர்தல் தேதியை அறிவித்து, அந்த கடைசி நாள் வரும்போதுதான் யார் யாரோடு கூட்டணி என்பது முடிவாகும். விஜய் பிரபாகர் தேமுதிக தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி  அமைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. என்று சொன்னார் இதுகுறித்து நீங்கள் என்ன சொல்லுறீங்க என்ற கேள்விக்கு…. நிருபர்கள் தான் விஜய் பிரபாகரனிடம் கேள்வி கேட்டீர்கள். விஜய் பிரபாகர் அந்த கேள்வியை கேட்கவில்லை. நீங்க கேட்ட கேள்விக்கு அவர் பதிலை சொல்லி இருக்காரு.

இன்றைக்கு தமிழகத்தில் மூன்றாவது அணி இல்லை…. முதல் கட்சியே தேசிய முற்போக்கு திராவிட கழகம் தான். இதை ஆணவத்தோடு சொல்லல… அவை அடக்கத்தோடு தான் சொல்கின்றேன்.பாக்கத்தான செய்றீங்க…. இப்பதான் விஜய் பிரபாகர் வந்து விட்டு போனார். இப்ப நான் வந்து இருக்கேன். தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கு. தேமுதிக இதுவரைக்கும் ஆட்சியில் அமர்ந்தது கிடையாது. சொந்த காசில் தங்களது வியர்வை சிந்தி இன்றைக்கு உழைக்கின்ற உண்மையான தொண்டர்கள் இருக்கின்ற கட்சியாக தேமுதிக இருக்கிறது.

இதுதான் ஒரு கட்சியின் பலம். அதனால நான் சொல்கின்றேன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இன்று முதல் கட்சியாக இருக்கிறது. அதனால நிச்சயமாக தேமுதிக எங்கு இருக்கோ அவங்க தான் வெற்றி பெறுவார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதை நான் உறுதியாக சொல்கிறேன் என பிரேமலதா தெரிவித்தார்.

Categories

Tech |