இந்தியாவில் வாட்ஸ்அப் பே மூலமாக பண பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ்அப் மூலமாக வழங்குவதற்கு மத்திய அரசின் என்பிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற சைகைகள் பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இனி வாட்ஸ் அப்பை மூலமாக பணம் பரிமாற்றம் செய்யலாம். இதுபற்றி ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், ” இந்தியா முழுவதிலும் வாட்ஸ்அப் பே சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாட்ஸ்அப் மூலமாக அனைவரும் எந்த கட்டணமும் இல்லாமல் பணம் செலுத்த முடியும். இது மிகவும் பாதுகாப்பானது” என்று அவர் கூறியுள்ளார்.