அனைவருக்கும் மிகவும் பிடித்த மார்னிங் ஸ்னாக்ஸான பிரட் வடை, எப்படி செய்யலாம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
பிரட் வடை செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் துண்டு – 2
கேரட் – அரை கப் (சிறிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
கரம் மசாலா – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி – அரை ஸ்பூன் நறுக்கியது
சீரகம் – கால் ஸ்பூன்
கொத்துமல்லி – கைப்பிடி அளவு
அரிசி மாவி – 2 கரண்டி
சோள மாவு – 2 கரண்டி
தண்ணீர் – சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் பிரட்டை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி எடுக்கவும். அதில் கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, உப்பு, இஞ்சி, சீரகம், கொத்துமல்லி ஆகியவை சேர்த்து கிண்டவும்.
அதன் பின் அரிசி மற்றும் சோள மாவை மெதுவாக தூவி பிசையவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அதனை அடுத்து வடை மாவு பதத்திற்கு வந்ததும் வடைகளாக பிடித்து, எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். இந்த வடை வேகமாக வெந்துரும். ஆதலால் கவனமாக பொரித்து எடுக்கவும். இப்போது டேஸ்டான பிரட் வடை தயார்.