Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு வாய்ப்பு கொடுங்க… வங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவோம்… அமித்ஷா அதிரடி பேச்சு…!!!

மேற்கு வங்காளத்தில் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் 5 ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவோம் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி காணவில்லை. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக பிடித்ததால் அது மம்தா பானர்ஜிக்கு பேரதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 294 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி காண வேண்டும் என்ற இலக்கோடு அமிர்ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து நேற்று முன்தினம் 2 நாள் சுற்றுப்பயணமாக அமித்ஷா மேற்கு வங்காளம் சென்றார். அப்போது கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ” மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் ஆட்சி முடிவடைந்து பாஜக ஆட்சி கட்டாயம் வரும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சியில் அமர்வோம்.

மேற்கு வங்க மக்கள் அனைவரும் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் ஆகிய கட்சி அனைத்திற்கும் வாய்ப்பு அளித்து உள்ளீர்கள். அதனைப் போலவே எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். வாய்ப்புக் கொடுத்தால் 5 ஆண்டுகளில் பங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவோம். மேலும் மாநிலத்தின் ஊடுருவல்கார்களை தடுத்து நிறுத்தி எல்லைகளை பாதுகாப்போம். பாஜக மாற்றத்தை கொண்டு வரும் என்று 2010ல் மக்கள் மம்தா பானர்ஜியை நம்பினார்கள். ஆனால் இன்று மக்கள் அனைவரும் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ள நிவாரணம் ஆகியவற்றில் கூட ஊழல் செய்வதற்கு திரிணாமுல் ஆட்சி வெட்கப்படவில்லை. மம்தா பானர்ஜி வாக்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 பாஜக உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் அவர் விளக்கியுள்ளார். அதுமட்டுமன்றி விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் உதவித் தொகை திட்டத்தை அவர் அனுமதிக்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |