Categories
உலக செய்திகள்

விமானத்தில் பறந்த இதயம்…. அடுத்து என்ன நடந்தது…? வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

தானம் அளிக்கப்பட்ட இதயத்தை கொண்டு சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று தானமாக அளிக்கப்பட்ட இதயத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு ஊழியர்கள் மற்றும் பைலட்டுடன் புறப்பட்டது. இதையடுத்து தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் கெக் மருத்துவமனையின் மேல் விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் தானம் அளிக்கப்பட்ட இதயத்தை கொண்டு வந்த தனியார் ஏர் ஆம்புலன்ஸில் இருந்த இரண்டு சுகாதார ஊழியர்கள் மற்றும் பைலட் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் இந்த விபத்தில் தானமாக அளிக்கப்பட்ட இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. மேலும் இதில் இருந்த மற்ற பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அவசர சேவை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |