கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசுகளை விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கும், பட்டாசுகளை விற்பதற்கும் பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசு விற்பதற்கும் படிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் காற்றின் துகள்களின் அதிகரிக்கக்கூடிய செறிவு கொரோனா பரவலுக்கு ஏற்ற நிலைமையை உருவாக்கும் என்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால் சட்டீஸ்கர் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் அனைவரும் வருந்தமடைந்துள்ளனர்.