Categories
உலக செய்திகள்

எல்லாம் பேசிட்டு இருக்கேன்… பணியை தொடங்கிய பைடன்…. அதிபராவதற்குள் அசத்தல் …!!

பொருளாதாரம், கொரோனா போன்ற பல விஷயங்கள் குறித்து அதிபராவதற்ககு முன்பே ஜோ பைடன் ஆய்வாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கின்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை பெற்று, புதிய அதிபராக போகும் ஜோ பைடன் மக்களுக்கு உரையாற்றினார். எண்ணிக்கை ஒரு தெளிவான செய்தியை நமக்கு சொல்கின்றது. 24 மணி நேரத்துக்கு முன்னாடி ஜார்ஜியாவின் பின் தங்கி இருந்தோம். இப்போது நாம் முன்னேறி இருக்கின்றோம். பென்சில்வேனியாவில் நம்முடைய வெற்றி உறுதி. அரிசோனாவில் நாம வெற்றி பெற போறோம். நம்முடைய வெற்றி இரட்டிப்பாகி இருக்கின்றது. இந்த எண்ணிக்கையை பாருங்க. இந்த தேர்தலில் நல்ல பெரும்பான்மையுடன் வெல்ல போகின்றோம்.

74 மில்லியன் வாக்குகள் நமக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இது வரைக்கும் இல்லாத பிரம்மாண்டமான  வாக்கு விகிதம் கிடைத்துள்ளது. நம்முடைய வெற்றி பெருமளவிற்கு சாதகமாக இருக்கின்றது. 24 ஆண்டுகள் ஆண்டுகளில் ஜனநாயக கட்சி வெச்சி அரிசோனாவில் வெற்றிபெற போகின்றது. நீல அலை பென்சில்வேனியாவில் வீசுகிறது. இந்த நாட்டினுடைய மையப் பகுதிகளில் நமது கட்சியின் செல்வாக்கு மீண்டும் மேலோங்கி இருக்கிறது.

Biden inches towards victory as he expands lead in Nevada

இது வெறும் எண்ணிக்கை அல்ல, வாக்காளர்களினுடைய நம்பிக்கை. இனங்கள் கடந்து, மதங்கள் கடந்து அமெரிக்கர்கள் நமக்கு வாக்களித்துள்ளார்கள். நாம் செயல்படுவதற்கு, கொரோனவை  கையாளுவதற்கு, பொருளாதாரத்தை கையாளுவதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நாம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது மக்களுடைய விருப்பம். இந்த நாட்டை பிரிப்பது நம்முடைய எண்ணம் அல்ல. 74 மில்லியன் மக்கள் மிகத் தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்.

நம்முடைய பணிகளைத் தொடங்குவதற்கு தாமதிக்க மாட்டோம்.  பொது சுகாதார நிபுணர்களுடன், பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை தொடங்கி விட்டோம். பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை தொடங்கிவிட்டோம். செயல்பட நாம் தாமதிக்க மாட்டோம். இரண்டு லட்சத்து 40 ஆயிரம் உயிர்கள் போயிருக்கு. வரலாறு காணாத அளவுக்கு கொரோனா தொற்று கூடிக்கொண்டு செல்கிறது. உயிரிழப்பால் அடக்கமுடியாத துயரங்களை மக்கள் சந்தித்து உள்ளார்கள். இந்த குறுகிய காலத்தில் சுற்றத்தாரை இழப்பது என்பது எத்தனை வலி மிகுந்தது என்பதை நாங்கள் உணர்கின்றோம்.

US Presidential Election 2020: Prominent Indian-Americans Among Business  Leaders Backing Joe Biden-Kamala Harris

இந்த ஆட்சியின் முதல் நாளிலிருந்து இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுக்க போகின்றோம். பல உயிர்களை காப்பாற்ற போகின்றோம். கமலா ஹரிஷ்ஸும், நானும் நேற்று கேள்விப்பட்டோம். குணமடைவோர் விகிதம் சரிந்து வருகிறது. உணவுக்கே பலர் கஷ்டப்படுகிறார்கள். ஒரு வளமான பொருளாதாரத்தை, பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை கொடுக்கப் போகின்றோம். நாம் அமைதி காக்க வேண்டிய நேரம் இது. எல்லா வாக்குகள் எண்ணப்படும் வரைக்கும் நாம் அமைதி காக்க வேண்டும் என ஜோ பைடன் தெரிவித்தார்.

Categories

Tech |