சிறுவன் ஒருவர் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் ஒருவர் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த காட்சியை சிறுவன் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதை அந்த சிறுவன் திருமணமான பெண்ணிடம் அவ்வப்போது காட்டி நடந்ததை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார். இதனால் அப்பெண் இந்த சம்பவத்தை வேறு யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அந்த சிறுவன் அந்த ஆபாச வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அப்பெண்ணின் கணவரிடம் இதைப் பற்றிக் கூறி வீடியோவை காட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் அப்பெண்ணை அடித்து வீட்டைவிட்டு வெளியே விரட்டியுள்ளார். இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாத அந்தப் பெண் வேறு வழியின்றி காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த துயரத்தை எல்லாம் சொல்லி புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சிறுவனை தேடி வருகின்றனர்.