பாஜக தொண்டர்கள் அஞ்சாத சிங்கங்கள் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று பாஜக வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்ததற்கு தமிழக அரசு தடைவிதித்து பாஜக தலைவர்களை கைது செய்தது. இந்த வேல் யாத்திரையில் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், ஒவ்வொரு நேரத்திலும் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், நம்முடைய மொழி, அத்தனையும் கேவலப்படுத்துவது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒருவேளை. இது தான் திமுகவின் அஜந்தாவாக இருக்கிறது. நிச்சயமாக இந்த யாத்திரை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முகத்திரையை கிழிக்க போகின்ற யாத்திரை.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முகத்திரையைக் வெளிச்சம் போடுகின்ற யாத்திரை. இந்த யாத்திரையை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய போலியான முகத்தை கிழிக்க கூடிய யாத்திரையாக அமையப்போகிறது. நிச்சயமாக இந்த யாத்திரை தமிழகம் முழுவதும் வலம் வரும். சகோதரர்களே நாம தைரியமாக நம்முடைய பணிகளை செய்யவேண்டும்.
இந்த யாத்திரை நடந்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறார்கள். இந்த யாத்திரையால் சட்ட ஒழுங்கு சீர்கெடும் என்றால் அப்போ அவங்களுடைய மனசுல இந்த யாத்திரையை கெடுக்கணும், அப்படிங்கறது தான் அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. ஸ்டாலின் அவர்களே உங்களுடைய எண்ணம் ஒருபோதும் பலிக்காது. நீங்கள் நினைப்பது கனவாகவே முடிவும். உங்களுடைய முதலமைச்சர் கனவும் இந்த யாத்திரையின் மூலம் கனவோடு தூக்கி எறியப்படும்.
பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள் வீரமிக்க, ஆற்றல் மிக்கவர்கள். தியாகத்திற்கு பேர் போனவர்கள். எந்த தடையையும் கண்டு அஞ்சாத சிங்கங்களாக பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். நாம் அனைவரும்… நம்முடைய எண்ணம், நம்முடைய லட்சியம், நம்முடைய நோக்கம், அத்தனையும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினுடைய எம்எல்ஏக்கள் அதிகப்படியாக செல்வார்கள் என்பதாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தான் ஆட்சியில் இருக்க போகிறது அது நிச்சயம்