Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் பல பலன்னு மின்னனுமா….வீட்டில் இருக்கும் பொருளை வைத்து டிப்ஸ்…!!!

உங்கள் முகம் பாலீஸ் போல மின்ன, வீட்டுல இருக்கும் பொருள்களை வைத்து செய்ய டிப்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காணலாம் .

மஞ்சள் மற்றும் கடலை மாவவு

உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்ற இது உதவுகிறது.  சுத்தமாக பராமரித்து தோல் பிரச்சினைகள் வருவதைத் தடுக்கிறது. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்கள், சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் சருமத்திற்கு இயற்கையான மினுமினுப்பை வழங்கக் கூடிய பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மஞ்சளில் அதிக அளவில், ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் நிறைந்துள்ளது. அவை முகப்பரு குறைத்து உங்கள் முகத்தில் உள்ள தளும்புகளை போக்கும். மேலும், பாக்டீரியா தொற்று, வீக்கம் மற்றும் பிற தோல் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. கடலை மாவு சிறந்த ஃபேஸ் பேக்காக செயல்படுகிறது. மாசு மரு இல்லாத சருமத்தைப் பெற,  2 தேக்கரண்டி கடலை மாவு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சில துளிகள் பால் கலந்து, இந்த பேஸ்டை உங்கள் முகத்திலும், கழுத்திலும் தடவவும். பின்னர், 20 நிமிடங்கள் கழித்து, அதை தண்ணீரினால் சுத்தம் செய்ய வேண்டும்.

தயிர் மற்றும் வெள்ளரிக்காய்

உங்கள் முகத்தில் தயிர் பூசுவது உங்கள் சருமத்தை வழுவழுப்பாக்கும். அதேசமயம் வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவும். அதன் பயோஆக்டிவ் தன்மை உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும். ஒரு சிறிய வெள்ளரிக்காயை எடுத்து அரைக்கவும். அதில் சுமார் 2 தேக்கரண்டி தயிர் சேர்க்கவும். அதை நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் இந்த கலவையை தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு இதனை கழுவ வேண்டும்.

தேன்

உங்கள் சரும அழகிற்கான, மிகச் சிறந்த சமையலறை பொருட்களில் தேன் ஒன்றாகும்.  அதோடு சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் சருமம் மிகவும் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. தேன் கலந்த கவவையை தயாரிக்க 3 தேக்கரண்டி தேனுடன் பால் கலக்க வேண்டும். பின்னர், அதை உங்கள் முகத்திலும் கழுத்திலும் தடவவும். 30 விநாடிகள் காத்திருந்து பின்னர் மெதுவாக உங்கள் முகத்தை ஸ்கரப் செய்யவும். நீங்கள் ஸ்க்ரப்பிங் செய்து முடித்த பிறகு தண்ணீரினால் சுத்தம் செய்யவும்.

Categories

Tech |