Categories
தேசிய செய்திகள்

“PUBG விளையாட்டு” இந்தியாவில் மீண்டும் ரீஎன்ட்ரி ….. அறிவிப்பு விரைவில்…!!

ஆன்லைன் விளையாட்டான பப்ஜியை இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டு வர அந்நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் பப்ஜி விளையாட்டால் அதிகமாக தற்கொலைகள் ஏற்பட்டதையடுத்து பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பப்ஜி விளையாட்டாளர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது. எனவே பப்ஜி விளையாட்டு மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் பப்ஜி கார்ப்பரேஷன் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிற்கு பப்ஜி விளையாட்டை கொண்டுவர திட்டம் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் தகுந்த ஆதாரங்களை குறிப்பிட்ட tech crench அறிக்கையில், பப்ஜி கார்ப்பரேஷன் சமீப காலமாக சர்வதேச அளவில் cloud சேவை வழங்கும் வல்லுநர்களுடன் இணைந்து இந்திய பப்ஜி பயனாளர்கள் டவுன்லோடை நாட்டிற்குள்ளேயே சேமித்து வைத்துள்ளதால் இந்த வருடத்தின் இறுதிக்குள் மீண்டும் பப்ஜி விளையாட்டை இந்தியாவிற்குள் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து சீன நிறுவனமான டென்சென்டுடன் பப்ஜி கார்ப்பரேஷன் இணைந்திருந்ததில் இருந்து விலகிக் கொண்டது.

இருப்பினும் மீண்டும் பப்ஜியை இந்தியாவிற்கு கொண்டு வர பப்ஜி கார்ப்பரேஷன் பெரும் போராட்டத்தில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இந்த பப்ஜி விளையாட்டு இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்குமா? அனுமதிக்காதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதையடுத்து இந்தியாவில் உள்ள 50 மில்லியன் பப்ஜி பயனாளர்கள் பப்ஜிக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்

Categories

Tech |