Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மார்னிங் டிபன்… அதுவும் 5 நிமிசத்துல… அசத்தலான சுவையில்…!!

வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி                                – 250 கிராம்
நெய் அல்லது டால்டா – ஒரு டீஸ்பூன்
தண்ணீர்                               – 600 மில்லி
கருவேப்பிலை                 – சிறிதளவு
வறுத்த பாசிப்பருப்பு      – 50 கிராம்
மிளகு, சீரகம்                      – ஒரு டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு               – சிறிதளவு
உப்பு                                       – சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் கலந்து, உப்பு போட்டு வேகவைத்து இறக்கவும்.

மற்றொரு சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்த்தும், அதில் மிளகு, சீரகம், முந்திரி பருப்பையும், கருவேப்பிலையும் போட்டு சிவக்க வறுத்தப்பின், அதனுடன்  வேகவைத்த அரிசி, பருப்பு  சேர்த்து கிளறி விடவும்.

இறுதியில் சாதத்தையும் அதனுடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். இப்போது சுவையான வெண்பொங்கல் தயார் .

Categories

Tech |