Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறுவென… ஈவினிங் ஸ்னாக்ஸ்…!!

முந்திரிப்பருப்பு பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:

முந்திரி பருப்பு               – அரை கிலோ
கடலை மாவு                  – அரை கிலோ
வனஸ்பதி                        – கால் கிலோ
பெரிய வெங்காயம்     – அரை கிலோ
அரிசி மாவு                      – 150 கிராம்
பச்சைமிளகாய்             – 5
கருவேப்பிலை              – 3 கொத்து
இஞ்சி                                 – சிறிய துண்டு
எண்ணெய்                       – தேவையான அளவு
உப்பு                                    – தேவையான அளவு

செய்முறை:

வம்ஸபதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளி போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பக்கோடா மீது கருவேப்பிலையை வறுத்து போட்டு சூடாக பரிமாறினால் மிக சுவையாக இருக்கும்.

Categories

Tech |