நடிகர் விஜய் அவர்களுக்கு மிக பெரிய ஆபத்து இருப்பதாக அவர் தந்தை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இளைய தளபதி விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் புதிதாக விஜய் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனால் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், “விஜய்யின் நன்மைக்காகவே நான் கட்சி ஆரம்பித்தேன். மேலும் நடிகர் விஜய் அவர்களை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து வருகிறது. இதை விஜய் அவர்கள் விரைவில் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.
மேலும் அவரது புகைப்படங்களை கட்சிக்காக பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதற்கும் தயாராக இருக்கிறேன். இதையடுத்து நடிகர் விஜய்க்கு தெரியாத ஒரு ரகசியமான விஷயம் ஒன்று அவரை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அவர் ஒரு விஷ வளையத்தில் தற்போது மாட்டிக் கொண்டிருக்கிறார். எனவே அந்த விஷ வளையத்திலிருந்து அவரை மீட்கவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் நடிகர் விஜய் அவர்களை சுற்றி பல கிரிமினல்கள் இருப்பதால் அவருக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கிறது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.